கொரோனாவில் இருந்து மீண்டார் பிறேஸில் ஜனாதிபதி
பிறேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிறேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் திகதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார். அதிபர் போல்சனேரோவுக்கு 21-ம் திகதி 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் 4வது சோதனையில் கொரோனாவில் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
பிறேசிலில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக பாதிப்புள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.