போதைப்பொருள் முத்திரை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்
போதைப்பொருளினால் தயாரிக்கப்பட்ட முத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருளினால் தயாரிக்கப்பட்ட எல்.எஸ்.டி. முத்திரைகள் 3,150 ஐ தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தச் சந்தேகநபர் நேற்று கொள்ளுப்பிட்டி பகத்தலே வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் இவர் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அப் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை புறக்கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தியபோது, அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.