பஹ்ரைனிலிருந்து வந்த 126 பேர் வீடு திரும்பினர்
பஹ்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 126 பேர், விமானப்படையின் இரணைமடு முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலைப் பூர்த்தி செய்துகொண்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையமானது, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் ஆலோசனைக்கு அமைய, அனைத்து வசதிகளுடனும் இயங்கி வருகின்றது.
இரணைமடு விமானப்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி குறூப் கப்டன் ரொஹான் பத்திரண உள்ளிட்டோரின் மேற்பார்வையின் கீழ், தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.