முஸ்லிம்களை அவமதிப்பதன் மூலம் வாக்களிப்பு வீதத்தை குறைக்க நாடகம் – ஹக்கீம்

“முஸ்லிம்களை அவமதிப்பதற்கும் அவர்களின் வாக்களிப்பு வீதத்தைக் குறைப்பதற்கும் பல நாடகங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து இந்த சதிமுயற்சிகளை முறியடிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 95 வீதமான உறுப்பினர்களையும் ஐந்து தலைவர்களையும் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியே தேர்தலில் வெற்றிபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி தெகியங்கவில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை என்ற பெயரில் அரசு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இதற்கு இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றது. இதன் மூலம் அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெறுவது குறித்து கவனம் செலுத்துகின்றனர்.

அவர்கள் தற்போது தமக்குள்ள வாக்கு வங்கியைக் காப்பாற்ற நினைக்கின்றனர். பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இந்த வலையில் விழமாட்டார்கள்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!