ஆசிய போட்டியின் வெள்ளிப்பதக்கம் தங்கமாக தரம் உயர்வு

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டியில் இந்திய கலப்பு 4×400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இநதிய அணிக்குக் கிடைத்த வெளிப்பதக்கம் தங்கப்பதக்கமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜகர்த்தாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த முகமது அனாஸ், எம்.ஆர். பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் 4×400மீ கலப்பு ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பஹ்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றது.

தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அனு ராகவன் 56.92 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 4-வது இடம் பிடித்தார்.

பஹ்ரைன் அணியில் கலந்து கொண்ட வீரர்களி்ல் ஒருவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது. கெமி அடெகோயா என்ற அந்த வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டள்ளது.

இதனால் 4×400மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கம், தங்கப் பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான தடைதாண்டி ஓடும் போட்டியில் 4-வது இடம் பிடித்த அனு ராகவன் வெண்கல பதக்கம் பெறுகிறார். இதில் கெமி தங்க பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!