வட கொரியாவில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நூதன தண்டனை
மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் மூன்று மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நூதன தண்டனையை வட கொரிய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று இப்போது வரை பிடிவாதமாக கூறி வருகிறது.
இந்நிலையில் வடகொரொரியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக மூன்று மாத கடின உழைப்பை அந்நாட்டு அரசு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வெளிவந்த ஒரு அறிக்கையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க மாணவர்கள் குழு ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். இதற்காக உயர்நிலை பள்ளி மாணவர்களை தயார்படுத்தி இருக்கிறார்கள்.
மாஸ்க் அணியாமல் யார் வெளியே வந்தாலும் பாரபட்சமின்றி அவர்களுக்கு மூன்று மாத கடின உழைப்பு தண்டனையாக வழங்கப்படும் என வட கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.