தடையை மீறி மீன் பிடித்த விமல், சூரிக்கு அபராதம்

நடிகர்கள் விமல், சூரி இருவரும் தடையை மீறி மீன் பிடித்ததற்காக வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17-ம் திகதி ஏரியில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் அங்கு மீன்பிடித்துள்ளது உறுதியானது. இதனை அடுத்து, விமல், சூரி உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்க்கப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும் வனத்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!