உரிய ஆசிரியர் மட்டும் வருகை தந்தால் போதும்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் 11, 12, 13ஆம் தரம்களில் உள்ள வகுப்புகளுக்கு பிற்பகல் 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீள ஆரம்பிக்கப்படும் வகுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களைத் தவிர, ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (23) அல்லது நாளை (24) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் திங்கட்கிழமை (27) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏனைய தரம்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் முன்னெடுக்கக் கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!