மேலும் 15 பேருக்கு கொரோனா; தொற்றாளர் எண்ணிக்கை 2,745
இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும், கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு மத்திய நிலையத் தொற்றாளருடன் தொடர்பைப் பேணிய ஒருவருக்குமே நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,745 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2064 பேர் குணமடைந்துள்ளனர். 670 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 107 பேர் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.