ஐஸ் உடன் மதுவரித் திணைக்கள அதிகாரி உட்பட எட்டுப்பேர் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட எட்டுப் பேர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் நான்கு பெண்கள் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருளைச் சந்தேகநபர்களுக்கு[ப் பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படும் மற்றுமொரு மதுவரித் திணைக்கள அதிகாரியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.