ஐக்கிய மக்கள் சக்தியின் மேன்முறையீடு தள்ளுபடி
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட் மைக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இது தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குறித்த மேன்முறையீட்டை, தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்குக்கான செலவாக 25 ஆயிரம் ரூபாவைப் பிரதிவாதிக்குச் செலுத்துமாறும் உத்தரவிட்டது.
ஐ.தே.க. தலைவர், உதவித் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் இவ்வழக்கின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா மற்றும் மிஸ்பா சத்தார் ஆகியோரும், பிரதித் தலைவர் ரவி கருணநாயக்க சார்பாக சட்டத்தரணி நியோமால் பெல்பொலவும், பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பாக சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.