ரி20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்களுக்கான ரி20 உலகக்கிண்ணப் போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஒக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது.

ஆனால், ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது ரி20 உலகக்கிண்ணப் போட்டி குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று  முந்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

 ரி20 உலகக்கிண்ணப் போட்டி 2021-ல் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு ரி20 உலகக்கிண்ணப் போட்டி அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ந் திகதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!