அவுஸ்திரேலிய மாநில கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமனம்
இலங்கை , பங்களாதேஷ் கிரிக்கட் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான சந்திக்க ஹத்துருசிங்க அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில கிரிக்கட் அணியின் சிரேஷ்ட உதவி துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்தபதவிக்காக அவுஸ்திரேலியாவில் கிறிஸ் ரொஜரும், மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளர் ஒருவரும் விண்ணப்பித்திருந்தனர். இறுதியில் ஹத்துருசிங்க இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.