ஒக்டோபரில் பரீட்சைகள் நடைபெறும்

 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் 11ஆம் திகதி நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறும்.

அடுத்த பாடசாலை விடுமுறையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்தார்.

தரம் 11, 12, 13 ஆகியவற்றிற்கான வகுப்புக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி இராஜாங்க செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார். அதன் பின்னர் ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தலுக்காக விடுமுறை வழங்கப்பட்டு, மீண்டும் 10ஆம் திகதி பாடசாலை திறக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!