அமெரிக்காவுக்காக உளவு பார்த்தவருக்கு மரண தண்டனை

  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.  காசிம் சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30 பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்தது.

இதனிடையே காசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் பொலிஸார் கைது செய்தனர்.

ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகளுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

  மவ்சாவி மஜித்துக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை ஈரானின் நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!