சுகாதார முறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/arres.jpg)
மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வெளியில் திரிந்த 3 ஆயிரத்து 61 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாமை தொடர்பில் 2 ஆயிரத்து 93 பேரும், சமூக இடைவெளி பின்பற்றாமை தொடர்பில் 968 பேரும் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளனர் என்று மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.