நீர்க் கட்டணத்தைச் செலுத்த டிசம்பர் வரை அவகாசம்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/water_2974-Edit@-1024x683.jpg)
நீர்க் கட்டணத்தைச் செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பாரியளவில் நீர் கட்டணம் அதிகரித்துள்ளது எனப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து இந்தச் சலுகையை அரசு வழங்கியுள்ளது