இலங்கையில் கொரோனா’ 2 ஆவது அலை ஏற்படும் – விசேட வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை
இலங்கை கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் இறுதி நிலையை அண்மித்துள்ளது என விசேட வைத்தியர்கள் சங்கம் விடுத்துள்ளது.
நாட்டின் நிலைமை தொடர்பில் விசேட வைத்தியர் என்ற ரீதியில் வருத்தமடைகிறோம் என அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லலந்த ரணசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்று ஏற்பட்டுள்ள நிலைமை எந்தத் திசையில் திரும்பும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொரோனவின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை முகம் கொடுத்த முறை மிகவும் சிறப்பானதாகும். அது குறித்து திருப்தி அடைய முடியும். அரசின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தவறான விழிப்புணர்வு காரணமாக மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் பரவியுள்ளமை நூற்றுக்கு நூறு வீதம் கூற முடியாது. எனினும், அதற்கு அருகில் நெருங்கியுள்ளோம்” – என்றார்.