ஒற்றுமையின்மையே தோல்விக்குக் காரணம் – அகிலவிராஜ் காரியவசம்
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமை சிதைந்துபோன சகல சந்தர்ப்பங்களிலும் கட்சிக்குத் தோல்வியே கிடைத்தது..”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல்வேறு சூழ்ச்சிகள் காணப்பட்டன. கட்சியின் தலைமைத்துவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு பயணிக்கும் செயற்பாடுகளிலிருந்து கட்சி உறுப்பினர்கள் சிலர் விலகியிருந்தனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தனிக் குழுக்களை அமைத்துக்கொண்டு கட்சிக்குள் செயற்பட முடியாது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக இருந்திருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை வெற்றியடைந்திருப்போம்.
அந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்டு இரு தடவைகள் நாட்டை ஆண்டுவிட்டு மீண்டும் சஜித்தை ஜனாதிபதியாக்கியிருப்போம்” – என்றார்.