பூநகரியில் தமிழ்க் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பூநகரியில் நடைபெற்றது.  
மாலை 5 மணிக்கு பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்புரைகளை கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சசிகலா ரவிராஜ், ,.ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச கிளையின் தலைவர் குபேந்திரன், முன்னாள் பூநகரி கோட்டக் கல்வி அதிகாரி தில்லைநாதன், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பலவற்றில் தலைவராக இருந்த இரத்தினமணி ஆகியோர் நிகழ்த்தினர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்   கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!