ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் – மீராமிதுன்

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைப்பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

 குறிப்பாக சமீபத்தில் அவர் ரஜினி மற்றும் விஜய் மீது குற்றம் சாட்டி இருந்தார் என்பதும் இருவர் மீதும் சைபர் செல்லில் புகார் அளிக்கப் போவதாக கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தமிழகத்தின் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் உதயநிதியை டேக் செய்து ’புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்றும், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

மீராமிதுனின் இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!