நான்காவது தலைமுறை பாடகியுடன் ஜேசுதாஸ்
சாதனைகள் பலவற்றுக்கு சொந்தக்காரனாகிய ஜேசுதாஸ் ஓசையில்லாமல் இன்னொரு சாதனையும் செய்துள்ளார். அவருடன், 4-வது தலைமுறையாக ஒரு பாடகி இணைந்து பாடியிருக்கிறார். அவரது பெயர் மாதங்கி அஜித்குமார். இவர், 3 வயதிலேயே எம்.எஸ்.விஸ்வநாதனுடன் மேடை கச்சேரியில் பாடகியாக அறிமுகமானவர்.
இப்போது, ‘கதவு எண் 7, கணேசபுரம்’ என்ற படத்துக்காக, “பனித்துளியே…” என்று தொடங்கும் பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து பாடுகிற அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.
இந்த பாடலுக்கு ரவி மேனன் இசையமைத்து இருக்கிறார்.