விதிகளை மீறிய ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றம்

 பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர், மேற்கு இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். .

  2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.  கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் மருத்துவ பாதுகாப்புடன் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், அணியின் பாதுகாப்பு விதிகளை ஆர்ச்சர் மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அவர்  ஐந்து நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார். அதனுடன், கொரோனா பரிசோதனை அவருக்கு  இரண்டு  முறை நடத்தப்படும்.  அவரது சுய தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைவதற்குள், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு  கிடைத்தால் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்.

:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!