சைவ உணவுக்கு மாறிய சினிமா பிரபலங்கள்
‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்தது முதல் நயன்தாரா சைவ உணவுக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு திரையுலகில் பலரை சைவ உணவுப் பிரியர்களாக மாற்றி இருக்கிறது.
நடிகர் விஜய் முன்பெல்லாம் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுவாராம். ஆனால் இப்போது வாரத்தில் இரு தினங்கள் மட்டுமே அசைவ உணவு எடுத்துக் கொள்கிறார்.
மற்றவர்களுக்குத் தன் கையால் பிரியாணி சமைத்துப் பரிமாறும் அஜித் அதைச் சுவைப்பதில்லை. பெரும்பாலும் சைவ உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுகிறாராம்.
நயன்தாராவுக்கு அசைவம் பிடிக்கும் என்றாலும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்தது முதல் சைவத்துக்கு மாறிவிட்டதாகத் தகவல். திரிஷாவும் பிரியாணிப் பிரியைதான். ஆனால், அசைவத்தைக் கைவிட்டு சைவத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
அனுஷ்காவும் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறிவிட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற பிறகு ரஜினியும் சைவ உணவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க கமல்ஹாசனும் அவர் வழியைப் பின்பற்றுகிறார்.