சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்த மீண்டும் ஏற்கவேமாட்டார் – நாமல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பொறுப்பை மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஏற்கமாட்டார் என அவரின் மூத்த புதல்வனான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக விளங்குவார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக நீடித்து கட்சியைப் பலப்படுத்துவார் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.