சஜித்தை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பு – முஜிபுர் ரஹ்மான்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/mujipur.jpg)
” பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.”
– இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
“தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டங்களையும் தேர்தல் சட்டங்களையும் மீறியேனும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார். அதன் காரணமாகவே அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரமாகச் செயற்படும் அரசு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதில்லை” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரச ஊடகங்கள் அரசுக்குப் பக்கசார்பாக செயற்படுகின்றன என்று தெரிவித்து அது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரச ஊடகங்கள் அரசின் தேர்தல் பிரசாரக் கூடங்கள் போன்று பக்கச்சார்பாகச் செயற்படுகின்றன. அந்த ஊடகங்களில் ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்படும் நேரம் மிகக் குறைவாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், இம்முறை ஆணைக்குழு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆணையாளரிடம் வலியுறுத்தினோம். இது வரி செலுத்துகின்ற மக்களின்