அதிக பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற இம்ரானுக்கு கெளரவம்
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாகிய இம்ரான் மஹ்ரூப் அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் Manthri.lk யினால் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்ற காலத்தில் 90 வீதத்துக்கு அதிகமான அமர்வுகளில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 முன்னாள உறுப்பினர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.