சீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை

சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் டிஜிட்டல் தொழில்நுட்ப செயலர் வெளியிட்ட அறிவிப்பில்,

ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இங்கிலாந்தில் உள்ள தொலைபேசி நிறுவனங்கள் 2027 – ஆம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.

அதே போல் டிசம்பர் 31 – ஆம் திகதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!