கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு நாளை 101-ஆவது பிறந்தநாள்
மும்பையை சேர்ந்த 100 வயது நிரம்பிய முதியவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். இதில் மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான
செய்தி என்னவென்றால் அந்த முதியவர் நாளை 101-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
மும்பையின் இந்து ஹிர்டே சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனையில் அர்ஜூன் கோவிந்த் நரிங்ரிஹர் என்ற 100 வயது நிரம்பிய முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சிகிச்சையின் பலனாக முதியர் அர்ஜூன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவரை இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற மருத்துவ ஊழியர்கள் முடிவு செய்தனர். அப்போது முதியர் அர்ஜூன் இன்று தனது 100-வது வயதை பூர்த்தி செய்வது அவருக்கு நாளை 101-வது வயது பிறப்பதும் மருத்துவ ஊழியர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, முதியவர் அர்ஜூனின் 101-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு இனிப்புகளை வழங்கியும் பாடல்களை பாடியும் தங்கள்
வாழ்த்துக்களை தெரிவித்து அவரை மருத்துவமனையில் இருந்து வழி அனுப்பி வைத்தனர்.