கடவுள் இராமர் இந்தியர் அல்ல நேபாளி – நேபாள பிரதமர்

 இந்தியர்களால் வணங்கப்படும் கடவுள் இராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். கலாசார அத்து மீறலில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது  என நேபாள  பிரதமர் சர்மா ஒலி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம்,  லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வரை படத்தை வெளியிட்டது. அதனை நேபாள பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயர்ஸி செய்வதாக குற்றம்சாட்டிய பிரதமர் ஒலி, தற்போது புதிய சர்ச்சை  கருத்தை வெளியிட்டு உள்ளார்.

தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும்.(காட்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ளது)

நாங்கள் கலாச்சார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன எனகூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!