உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றனர்

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது பற்றிய விசாரனைக்காக உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் இருவர் சீனாவுக்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங் கூறியதாவது:-

உலக சுகாதார நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கொரோனா தோற்றம் குறித்த ஆராய்ச்சியில் அறிவியல் அடிப்படையிலான ஒத்துழைப்புக்காக அந்த நிறுவனம் நிபுணர்களை அனுப்பி வைக்க சீனா ஒப்புக்கொண்டது. 

கொரோனா தோற்றத்தை கண்டுபிடிப்பது, அறிவியல் பிரச்சினை. அதை விஞ்ஞானிகள்தான் சர்வதேச ஒத்துழைப்புடன் ஆய்வு செய்ய வேண்டு்ம் என்று இருதரப்புக்கிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதுபோல், மற்ற நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் நிபுணர்களை அனுப்பி வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!