நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா [59] உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
1985ம் ஆண்டுக்கு பிறகு ஜிண்ட்ஸி மண்டேலா சர்வதேச முக்கியத்துவம் பெற்ற வராக மாறினார். ஏனெனில் அப்போதுதான், வெள்ளை சிறுபான்மை அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்க முன்வந்தது. ஆனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதால் மண்டேலா விடுதலையாக சம்மதம் தெரிவிக்கவில்லை.
தனது தந்தையின் இந்த முடிவை ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டியவர் ஜிண்ட்ஸி. இதன் மூலம் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். ஜிண்ட்ஸி மண்டேலா கடந்த 2015-ம் ஆண்டு முதல் டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்காவின் தூதராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.