மான்செஸ்டர் சிட்டியின் தடை நீக்கம்
இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மான்செஸ்டர் சிட்டி. 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்றது.
மான்செஸ்டர் சிட்டி அணி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்ஸ் இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது. இதை எதிர்த்து விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் மான்செஸ்டர் சிட்டி முறையீடு செய்தது.
விசாரணை முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி மீதான குற்றாச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்று இரண்டு ஆண்டு தடையை நீக்கி தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால், வருகிற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணியால் பங்கேற்க முடியும்.