மாலைதீவில் சிக்கியிருந்த 178 பேர் நாடு திரும்பினர்
தொழில்வாய்ப்புக்காக மாலைதீவு சென்று அங்கு சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேர் இன்று பிற்பகல் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விசேட விமானத்தில் வருகை தந்துள்ளனர்.
மாலைதீவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் அவர்கள் பணியாற்றியுள்ளனர் என்று தெரியவருகின்றது.
இவ்விமானப் பயணிகள் அனைவரும், மத்தல விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.