மொட்டு’வின் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தம்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பஸில் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 13, 14 ,15ஆம் ஆகிய திகதிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்துகொள்ளவிருந்த அனைத்துத் தேர்தல் பிரசாரக்  கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இம்முறை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ள பிரசாரக் கூட்டங்களை மட்டுப்படுத்துமாறும், அவ்வாறு பிரசாரக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!