முதல் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்

உலக சுகாதாரமையம் அறுவுறுத்திய நிலையிலும் இது வரை மாஸ்க் அணியாத அமெரிக்க ஜனாதிபதி டர்ம்ப் தற்போது முதன் முறையாக  மாஸ்க் அணிந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து உயிரைக்காப்பாற்றிக்கொள்வதில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடித்து சந்தைக்கு வரும் வரையில் இந்த முக கவசம்தான் கொரோனாவுக்கு எதிரான உயிர் கவசமாக தொடரவும் போகிறது என்பது நிஜம்.  உலகமெங்கும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த முக கவசம், அத்தியாவசியமாகி இருக்கிறது.

ஆனால், இந்த முக கவசம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தபோதுகூட, நான் அதைச் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தவர் இந்த ட்ரம்ப்.

 . உலகத் தலைவர்கள் அத்தனைபேரும் முக கவசங்களுடன் இப்போது பொது வெளியில் வாடிக்கையாகிப்போனாலும், “நான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நினைக்கவில்லை. முக கவசம் அணிந்து பல நாட்டு ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும், சர்வாதிகாரிகளையும், மன்னர்களையும், ராணிகளையும் நான் எப்படி சந்தித்து பேசுவது?” என்று கேட்டார் டிரம்ப். டிரம்புடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார்.

அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது ட்ரம்ப் மாக்ஸ் அணிவதில்லை. இந்நிலையில் நேற்று காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறு சென்றார். அப்போது முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார். மேலும் ‘‘எந்த இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!