அமிதாப்பச்சன் குணமடைய பிரார்த்திக்கின்றார் மஹிந்த
பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன், அவரது புதல்வரும் நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய, அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நடிகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் இந்தியாவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனது குடும்பத்தினருடன் கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அமிதாப்பச்சன் தனது ருவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.