அமிதாப்பச்சனுக்கும் அவர் மகனுக்கும் கொரோனா
நடிகர் அமிதாப்பச்சனுக்கும் அவர் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அமிதாப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
“நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனை செய்துகொள்ளவும்”
– என அறிவுறுத்தியுள்ளார்
இந்நிலையில் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘ எனக்கும் என் தந்தைக்கும் கொரோனா உறுதியானதால் நாங்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். எங்களுடன் 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்யவேண்டும்” – என டுவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார்.