பென் ஸ்டோக்ஸின் உடையில் இந்திய மருத்துவரின் பெயர்
கிரிக்கெட்டின்மீதுவிகாஸ்குமார் கொண்ட காதலுக்கு அளிக்கும் பரிசாகபென் ஸ்டோக்ஸ் அணிந்திருந்த உடையில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற கனவுடன் இருந்த விகாஸ், மருத்துவரானார்.
கடந்த 110-க்கு நாள்களுக்கு மேலாக முடங்கிகிடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் புத்துயிர் பெற்றுள்ளன. வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்து போராடி உலகத்தின் இயல்பு நிலைக்கு புதுரத்தம் பாய்ச்சுவது மருத்துவர்களே. அத்தகைய மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மருத்துவர்களின் பெயர்கள் பொறித்த சீருடையை அணிந்தவாறு பயிற்சி களத்தில் இறங்கியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.
விகாஸ்குமார் குமார் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர். இங்கிலாந்தின் டர்ஹாமில்லில் உள்ள டார்லிங்டன் நகரில் இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ்) அறக்கட்டளை மருத்துவமனையின் முக்கிய பிரிவில் பணிபுரிகிறார். கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட மருத்துவர் விகாஸ் குமார் சில கிரிக்கெட் கிளப்களால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பில் உள்ளார். கிரிக்கெட் மீது விகாஸ் கொண்ட காதலுக்கு கிரிக்கெட் அளிக்கும் பரிசாக உலக கோப்பை இறுதிப்போட்டிநாயகனான பென் ஸ்டோக்ஸ் அணிந்திருந்த சீருடையில் அவரின் பெயர் இடம்பெற்றிருந்தது.