வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்துவருதல் மட்டுப்படுத்தப்படும்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என்று கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதிபதியுமான  சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்  தாக்கத்துக்குப் பின்னர் இதுவரையில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும்  அவர் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!