தேர்தல் பணிகளில் இராணுவம் ஈடுபடாது – மஹிந்த தேசப்பிரிய

“பொதுத்தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்போவதில்லை. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். எனவே, பாதுகாப்புத் தொடர்பில் யாரும் சந்கேமடையத் தேவையில்லை.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று ஊடக பிரதானிகளைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது:-

“சுதந்திரமான, நீதியான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். குழப்பங்கள் எதுவுமின்றி தேர்தல் நடைபெற சகல தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!