அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடால் விலகல்

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஓகஸ்ட் 31- ஆம் திகதி முதல் செப்டம்பர் 13- ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.   நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால்   வீரர்கள் பலர் அங்கு செல்லத் தயங்குகிறார்கள்.

இந்த நிலையில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், அமெரிக்க ஓபனின் நடப்பு சம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செப்டம்பர் 13 ஆம் திகதி தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஓபனில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய தெளிவாகி விட்டது. செப்டம்பர் 27- ஆம் திகதி தொடங்கும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகும் வகையில் அவர் மாட்ரிட் ஓபனில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!