பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு
இலங்கையிலிருந்து 2006 ஜூலை தொடக்கம் என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வந்தவர் வந்தியத்தேவன். இடைநடுவில் எழுத்துலகிலிருந்து காணாமல் போன மயூரன் எனும் இயற்பெயர் கொண்ட இவரை, “பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு” எனும் கட்டுரையுடன் அகரம் தளம் அழைத்து வருகின்றது.
காட்சி 8: தஞ்சைக் கோட்டையில் புலவர்களுடன் சக்கரவர்த்திக்கு வந்த ஓலையை சின்னப் பழுவேட்டரையிரடம் காட்டி அனுமதி பெற்று சுந்தரசோழருக்கு கொடுக்க வந்தியத்தேவன் செல்கின்றான். சுந்தரசோழரின் பெருமைகளை புலவர்கள் போற்றும் காட்சியில் ஜெயமோகன் நிச்சயமாக தன் கைவரிசையைக் காட்டுவார் என நினைக்கின்றேன். அத்துடன் அங்கே சோழநாட்டிற்கு அபாயம் அபாயம் என சத்தமிட்ட வந்தியதேவனை சின்னப் பழுவேட்டரையர் ஓடவிடாமல் கையில் பிடித்தபோது அவன் அபயம் அபயம் என சத்தமிட்டேன் எனக்கூறி தப்பினாலும், பின்னர் சின்னப் பழுவேட்டரையினரால் அவனது ஆடைகள் களையப்பட்டு […] காட்சி 4 : குந்தவை, வானதி அறிமுகம் கதாநாயகிகள் அறிமுகம். பொதுவாக மணிரத்னத்தின் கதாநாயகிகள் அழகானவர்களாகவும் போராட்டகுணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பொன்னியின் செல்வனில் இளையபிராட்டியார் குந்தவையும் வானதியும் அரிசிலாற்றில் படகில் பயணம் செய்கின்றார்கள். இந்தகாட்சியை நிச்சயம் மணிரத்னம் ரசிகர்களின் கண்களுக்கு ஒரு விருந்தாக்குவார். ஏனெனில் இருவரும் அழகில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை. இளையபிராட்டியாரிடம் நாற்குணமும் நாற்படையாக இருக்கிறது. வானதியோ ஒரு பயந்தசுபாவம் உடைய பெண். இதனை ஒரு பாடல் மூலம் அவர்கள் தோழிகளுடன் ஆடிப்ப்பாடுவது போல காட்டி, […] தமிழ் மொழி இலக்கியங்களில் ஐம்பெருங் காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கந்தபுராணம், பெரியபுராணம் என பல இலக்கியங்கள் பண்டைய காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் பாட்டுடைத்லைவனாக கடவுள்களையும் மன்னர்கள் சிலரையும் வைத்து எழுதப்பட்டவையே. பிற்காலத்தில் நாவல், சிறுகதை இலக்கியங்கள் தோன்றிய பின்னர் சாதாரணமானவர்களையும் கதையின் நாயக நாயகிகளாக வைத்து பல புதினங்கள் எழுதப்பட்டன. அவற்றில் கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவல் இன்றுவரை பலராலும் வியந்து பேசப்படும் ஒரு புதினமாகும். சோழர்களினதும் அவர்களது […]
பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு [பகுதி 03]
பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு [பகுதி 02]
பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு [பகுதி 01]